Thursday, October 6, 2011

குங்க்ஃபூ கற்கும் ஹைதராபாத் பள்ளி முஸ்லிம் மாணவிகள்!

சீன மொழியில் உஷு (武术 - wushu martial arts) எனப்படும் வீரமிக்க போர் தந்திரக் கலையை ஹைதராபாத்தில் உள்ள St. Maaz high school முஸ்லிம் பெண்களுக்கு பயிற்றுவிக்கிறது. பள்ளி வளாகத்திற்கு உள்ளாகவே வாரம் ஒருமுறை பயிற்றுவிக்கப்படும் இக்கலையினை இப்பள்ளியின் பெண்கள் ஆர்வமுடன் கற்றுத் தேர்ந்து வருகின்றனர்.




தவறான பார்வைகளிலிருந்து ஒரு பெண் தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஹிஜாப் பெரிதும் உதவுகிறது என்பதும், ஹிஜாப் அணிவதன் மூலம் பிற பெண்களை விட அதிக அளவிலான தன்னம்பிக்கை ஏற்படுகிறது என்பதும் பிற மதத்தவர்களே ஒப்புக் கொண்ட உண்மை. சவூதிக்கு பயணித்த பிறகு, ஹிஜாப் அளிக்கும் கண்ணியம் பற்றி தாமதமாக உணர்ந்த சகுந்தலா நரசிம்ஹன் என்ற சகோதரி இதற்கு ஒரு சான்று. (வாசிக்க: http://www.satyamargam.com/976 | 
ஹிஜாபுக்குப் பின் கண்ட வாழ்க்கை! - சகுந்தலா நரசிம்ஹன்)

அதே நேரத்தில், தனியாக இருக்கும் பெண்ணிடம், விஷமி(கள்) தரும் தொல்லைகளுக்கு பதிலடியாக இத் தற்காப்புக்கலை மிகவும் உதவியாக இருக்கும் என்று பரவலாக எதிர்பார்க்கப் படுகிறது. இதன் அவசியத்தை உணர்ந்து பயிற்றுவிக்கும் ஹைதராபாத் பள்ளியைத் தொடர்ந்து தமிழகமெங்கும் இப்பயிற்சியை பெண்கள் பயிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் அறிமுகம் செய்ய வேண்டும்.

(கடந்த ஜூலை 8, 2008 இல் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை)
உஷூ பயிற்சியாளர் ரஹ்மான் மாணவிகளுக்கு பயிற்சி தருகிறார்.










படங்கள் நன்றி: chinadaily.com.cn -http://islamicdress.blogspot.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன