Thursday, February 28, 2013

சமூக விடுதலையை முன்னெடுப்போம் ! பெண் விடுதலையை சாதிப்போம் !


சன் – கலைஞர் – விஐய் டி.வி போன்ற விசப்பாம்புகளே!
காமவெறியைத் தூண்டும் ஆபாசக் குத்தாட்டங்களையும் –விளம்பரங்களையும் உடனே நிறுத்துங்கள்!
உழைக்கும் மக்களே!
இளம் நெஞ்சங்களில் நஞ்சை விதைக்கும் அனைத்து டி.வி களின் ஆபாச வக்கிரங்களையும் ஒழித்துக்கட்டப் போராடுவோம் !
  • ‘என் தங்கையின் கற்பையல்லவா காணிக்கையாகக் கேட்டான் அந்தப் பூசாரி’ என்று வீரவசனம் எழுதிய கலைஞர் ‘’மானாட மயிலாட’’ என்ற பெயரில் ஆயிரமாயிரம் தங்கைகளின் மானத்தை விலைபேசி தனது டி.வி யின் மூலம் கல்லா கட்டும்  அயோக்கியத்தனத்தை அம்பலப்படுத்துவோம்!
  • நண்டு லுங்கிக்கும் ஆக்ஸ் செண்டுக்கும் சோரம்போகும் இழிப்பிறவிகளாக பெண்களை சித்தரிக்கும் வக்கிர விளம்பரங்களை விரட்டியடிப்போம் !
  • “ஆயிரங்காலத்து பயிர் திருமணம்‘’ என்ற மக்களின் முதுமொழியை முடமாக்கி அரைக் காசு பெறாத ‘மாசா’ விற்கு திருமணத்தை விலைபேசும் வக்கிர விளம்பரங்களைத் தடுத்து நிறுத்தப் போராடுவோம் !
  • ஜுனியர் சூப்பர் சிங்கரில் ‘’அயிட்டம் சாங்கில் பீலிங் பத்தல‘ ’என்று துளிர்களிடம் காம உணர்ச்சியைத் தூண்டும் பணப் பேய்களுக்கு பாடை கட்டுவோம் !
  • சரவணனின் ஆணாதிக்க வக்கிரத்தை எதிர்த்துப் போராடும் மீனாட்சியை கர்வம் பிடித்த பெண்ணாக சித்தரித்து பெண்களின் ஜனநாயக உணர்வை மழுங்கடிக்கும் சரவணன் – மீனாட்சி சீரியலை சிறைப்படுத்தப் போராடுவோம் !
  • பெண்ணை போகப்பொருளாய் ஆணுக்கு சேவை செய்யும் அடிமையாய் சித்தரிக்கும் விளம்பரங்களை, சீரியலை, சினிமாக்களை ஒழித்துக்கட்ட ஒரணியில் திரள்வோம் !
  • பெண்ணின் மேன்மையை சிதைக்கும் பெண்ணின் ஜனநாயக உரிமையை மறுக்கும் பார்ப்பன – சாதி ஆணாதிக்கத்தையும் மறுகாலனியாக்கப் பண்பாட்டையும் பாதுகாக்கும் இந்த போலி ஜனநாயக அரசை மோதி வீழ்த்துவோம்!
புதிய ஜனநாயக அரசை புரட்சியின் மூலம் கட்டியமைப்போம் ! பெண்களின் ஜனநாயக உரிமையை மீட்டெடுப்போம் !

thanks to vinavu.com

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்-விமர்சனங்கள் வரவேற்கபடுகின்றன